Morning Wrap | 28.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்....!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழகத்தில் 12 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பஸவராஜின் தந்தை எஸ்.ஆர். பொம்மை ஒருங்கிணைக்கப்பட்ட கர்நாடகாவின் 11வது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.ஜனதா கட்சியைச் சேர்ந்த பொம்மை ஆகஸ்ட் 1988ல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார்.
TN Officers Transfer: தமிழ்நாட்டில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேற்று நடைபெற இருந்த இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி குருணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷ்னராக எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். தொழில்முறை திறமை மற்றும் நேர்மைக்காக அறியப்பட்ட அஸ்தானா பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.
Ind vs SL, 2021: க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த அந்த 8 பேர்... கொரோனா பீதியில் இந்திய அணி
குடியுரிமை திருத்த சட்டம் 2019(சிஏஏ) கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான கால வரம்பை 09/01.2022 வரை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான துணை சட்ட குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மூலம்தான் எல்லை பிரச்னையை தீர்க்க முடியும் என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந் ராய் தெரிவித்தார். ஹரியானா-ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் - ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா- கர்நாடகா, அசாம் -அருணாச்சலப் பிரதேசம், அசாம் - நாகாலாந்து, அசாம் -மேகாலாயா, அசாம் - மிசோரம் ஆகியவை இடையே எல்லை பிரச்னை தொடர்பாக எதிர்ப்பு மற்றும் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் அலை காலக்கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்தத் தரவுகள் நடந்துவரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 13 ஆகஸ்ட்டில் கூட்டத்தொடர் நிறைவடைய இருக்கும் சூழலில் முன்னதாக இந்தத் தரவுகள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oxygen deaths: ஆக்சிஜன் பற்றாக்குறை.. இறந்தது எத்தனை பேர்? லிஸ்ட் கேக்கும் மத்திய அரசு!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கன் இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இன்று, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசவுள்ளார்.