Ind vs SL, 2021: க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த அந்த 8 பேர்... கொரோனா பீதியில் இந்திய அணி
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும். இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற சமன் நிலைக்கு வரும்
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று மாலை, இரண்டாவது டி-20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
NEWS : Krunal Pandya tests positive.
— BCCI (@BCCI) July 27, 2021
Second Sri Lanka-India T20I postponed to July 28.
The entire contingent is undergoing RT-PCR tests today to ascertain any further outbreak in the squad.#SLvIND
இன்று காலை, க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறியான தொண்டை கரகரப்பு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, அவருக்கு ஆர்.டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 8 வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே, நாளை போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து உறுதி செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும். இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற சமன் நிலைக்கு வரும். முன்னதாக, இன்று நடைபெற இருந்த டி-20 போட்டி நாளை மாலையும், வரும் வியாழக்கிழமை அன்று மூன்றாவது டி-20 போட்டியும் நடைபெற இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
4⃣/2⃣2⃣ in 3.3 overs 🔥🔥@BhuviOfficial wins the Man of the Match award for his splendid performance in the 1st #SLvIND T20I👏👏#TeamIndia pic.twitter.com/DlV3aIK4um
— BCCI (@BCCI) July 25, 2021
இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ஷிகர்தவான், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். கடந்த போட்டியில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த பிரித்வி ஷா இந்த போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் ரன் மிகப்பெரிய அளவில் உயரும். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கவலையளிக்கிறது.
பந்துவீச்சைப் பொருத்தவரை துணைகேப்டன் புவனேஷ்குமார் அற்புதமாக பந்துவீசி வருகிறார். கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்தார். மேலும், ஹர்திக் பாண்ட்யாவும் வேகப்பந்துவீச்சில் துணையாக உள்ளார். சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் தொடர்ந்து அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவருக்கு துணையாக குல்தீப் யாதவ் உள்ளார்.