மேலும் அறிய
Advertisement
News Headlines: கனமழைக்கு வாய்ப்பு.. பைனலில் சென்னை... பாகிஸ்தானில் சோகம்... இன்னும் பல!
Headlines Today, 11 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைஅதிகமாகவும், வகுப்பறை குறைவாகவும் இருக்கும்பட்சத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கற்றல், கற்பித்தல் பணி, மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று மாநிலம் முழுவதும் 30,௦00 இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 22 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- தமிழக அரசின் சிறு தவறுகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் பெரிய நன்மைகள் செய்யும் போது அதற்கு பாராட்டுதல்களை தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
- வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- மாநிலம் முழுவதும் 1,40,091 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,329 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 171 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியா:
- மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது என நிலக்கரித்துறை அமைச்சகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது 4 நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
- நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 23,624 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,30,971ஆக குறைந்துள்ளது.
- உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய ரயில் மறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த கோர சம்பவத்துக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.
நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களுக்கான இந்திய குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வுகள் நேற்று நடைபெற்றது - மாலத்தீவிலிருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் வியாபாரம் தொடர்பாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
- எரிபொருள் பற்றக்குறையின் காரணமாக லெபனானின் முக்கிய மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் நாடே இருளில் மூழ்கியுள்ளது.
- பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் நேற்று மரணம் அடைந்தார்
விளையாட்டு:
- ஐபிஎல்20 முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், 4 விக்கெட் வித்தியாசத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion