மேலும் அறிய

News Headlines: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தள்ளுபடி, ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,30,127 கோடி... மேலும் சில முக்கியச்செய்திகள்

Headlines Today, 2nd Nov: இன்றைய தினத்தில் அறியவேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது.
  • தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • வன்னிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார்
  • ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகர் சூர்யா பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கினார். 
  • ஜெய்பீம் திரைப்படம் பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.  வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள  ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் என்றும் தெரிவித்தார். 
  • நவம்பர் 1ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை  முதலமைச்சர் 
    வழங்கினார்.
  • கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இந்தியா:  

  • கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,30,127 கோடி வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வருவாயைவிட 24 சதவீதம் அதிகமாகும். மேலும், கொரோனா தொற்றுக்கு முந்தைய  2019-20 நிதியாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட 36 சதவீதம் அதிகமாகும்.
  • இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. 
  • ஹஜ் புனித யாத்திரை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தெரிவித்தார்.

உலகம்: 

  • கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். 2070-ல் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு நிலையை இந்தியா அடைய இருப்பதாக தெரிவித்தார்.     
  • ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர்  ஃபியூமியோ கிஷிடா வெற்றி பெற்றார். ஃபியூமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி தம் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.     

விளையாட்டு:  

  • நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிசுற்று போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.       
  • உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீத் மற்றும் நிஷாந்த் தேவ் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
  • கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற அனைவருக்கும் விளையாட்டு அமைச்சகம் பதக்கங்களை வழங்கியது.
    மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் 2020-ன் அனைத்து வெற்றியாளர்களும் ஏற்கனவே ரொக்க விருதுகளைப் பெற்றிருந்தனர், ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக கடந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் விழா நடைபெற்றபோது அவர்களால் கோப்பைகள் மற்றும் சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக, அவ்விருதுகள் நேற்று அளிக்கப்பட்டன.   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget