மேலும் அறிய

NIA Raid: என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை.. துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு.. நடந்தது என்ன?

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நேற்று தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வழக்கு பின்னணி: 

நேற்று காலை எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்களின் வீடு என தமிழகம் முழுவதும் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரை 2019 ஆம் ஆண்டு ஒரு கும்பல் வழிமறித்து கொலை செய்தது. இந்த வழக்கில் குறிச்சி மலையை சேர்ந்த முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஸ்வான், அசாருதின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு என்.ஐ.ஏ வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ தரப்பில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக நெல்லை முபாரக் கூறுகையில், “ இந்த சோதனைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படுகிறது என்றும், சிறுபாண்மை கட்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கு போடப்படும் சதி திட்டமாகும். இந்த வழக்கிற்கும் எஸ்டிபிஐ அமைப்புக்கும் எந்த சம்மதமும் இல்லை” என குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்:

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அப்பாஸ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினர். அதன் பின் அவரிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். இவர் ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மாவட்ட செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளித்தார்.

கொலை சம்பவம் தஞ்சையில் நடைபெற்றுள்ளதால் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பக்ருதீன் என்பவரது வீட்டில் காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணி வரை நடைபெற்றது. இதில் இரண்டு செல்போன்கள், பென் டிரைவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாபநாசம் அருகே அதிராம்பட்டினம், ராஜகிரி, கும்பகோணம், திருபுவனம், திருவாய்ப்பாடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நிசார் அகமது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பென் டிரைவுகள், ஹார்டு டிஸ்க், டைரி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 3 செல்போன்கள், லேப் டாப், ஹார்டு டிஸ்க் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

துப்பு கொடுத்தால் 5 லட்சம் பரிசு: 

இந்த சோதனை தொடர்பாக டெல்லியில் இருக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள், “ ஏற்கனவே ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 18 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்கானாசுதீன், சாகுல்ஹமீது, நபீல்ஹசன் ஆகிய 5 பேர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க துப்பு கொடுக்கப்பட்டால் ரூ 5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும் என வழங்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget