காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியீட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி இந்தியா மற்றும் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை தெளிவாக தரும் முக்கியத் தலைப்புச் செய்திகள்:
1. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்கு எதிராக தனி மனிதராக போராடியவர் அவர்.
2. நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மு.க ஸ்டாலின், இன்று தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோருகிறார்.
3. 2015-16-ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணைய தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1, 212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் பத்தாம் தேதிக்குள் பணியில் இணையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கோவிட் வார்டுகள் உட்பட பல்வேறு மருத்துவ பிரிவுகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
4. கொரோனா நோய்த் தொற்று நெருக்கடிக்கு தீர்வு காண முழு ஊரடங்கு ஒன்றே வழி என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.
5. ஐதராபாத் உயிரியல் பூங்காவில் கோவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் வேகமாக குணமடைந்து வருகின்றன. கடந்தாண்டும் இதேபோல் உலகின் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காங்களில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் விலங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த உண்மையான ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
6. தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியீட்டது. அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வருகிறது.
7. தமிழகத்தில் செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8. கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் 24-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் மறு அறிவிப்பு வரும்வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
9. பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று முடக்கப்பட்டது. சர்சைக்குரிய பதிவுகளை அவர் தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
10.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே இரவில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.