Breaking Live: கடந்த 24 மணி நேரத்தில் 90, 928 பேருக்கு கொரோனா தொற்று - கடந்த வாரத்தை விட 591% அதிகம்
Breaking News LIVE Updates Today Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Breaking News in Tamil
மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல், இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இரவு நேர ஊரடங்கின்போது, மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு இரவு நேர ஊரடங்கின்போது தடையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பிற்பகல் பிரதமர் நரேந்திரமோடி, பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Daily Positivity Rate: தினசரி பாதிப்பு விகிதம் 6.43 சதவீதமாக உள்ளது
தினசரி பாதிப்பு விகிதம் 6.43 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.47% ஆகவும் உள்ளது.
2630 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 2630 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 797 பேருக்கும், தில்லியில் 465 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 330 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 110.
18.43 கோடிக்கும் மேற்பட்ட (18,43,66,611) தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 18.43 கோடிக்கும் மேற்பட்ட (18,43,66,611) தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக அதிகரிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதன், காரணமாக இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக அதிகரித்துள்ளது.
பொங்கல் விடுமுறையில் நடைபெறயிருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து அறிவிப்பு - மதுரை எம்.பி வரவேற்பு
பொங்கல் விடுமுறையில் நடைபெறயிருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து. மகிழ்வும் நன்றியும். தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முடிவுகளை கைவிடுங்கள் என இந்தியா போஸ்ட் பொது இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தற்போது கோவிட் காரணங்களை சுட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்தார்.