Breaking Live: கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியம் அதிகரிப்பு - முதல்வர் ஸ்டாலின்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Latest News in Tamil Today LIVE Updates:
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 1639 பேருக்குக் கொரோனா, 27 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1639 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான்காம் நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1600ஐக் கடந்தது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மேலும் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியம் அதிகரிப்பு - முதல்வர் ஸ்டாலின்
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், பொதுப் போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்றும், கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்தது
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,587இல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்
கொரோனா வைரஸ்க்கு கூட்டம், கொண்டாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அதனால், பண்டிகைகள வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினார் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.