Breaking Live : 15-18 வயசு தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்கும்: பிரதமர் மோடி
Breaking News LIVE Today Tamil, 25 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில்:
“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சேவை, இரக்கம், பணிவு ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், மதிப்புமிக்க போதனைகளையும், நாம் நினைவுகூர்வோம். அனைவரும் ஆரோக்கியத்தோடும், வளமாகவும் இருக்கட்டும். அனைத்து இடங்களிலும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்” என்று பதிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன
மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில், 18 லட்சம் தனிமைப்படுத்தல் படுக்கைகள், 1.4 தீவிர சிகிச்சைப்பிரிவு வசதியுடன் கூடிய படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் 3000 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்: பிரதமர் மோடி
இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
15-18 வயதினருக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி: பிரதமர் மோடி
இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 15முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தம் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் விரைவில் வர உள்ளது: பிரதமர் மோடி
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் டி.என்.ஏ தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி
கொவிட்-19 மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு எதிரான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.