Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 9 பேர் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது நோயின் தீவிரம், மாநிலத்தின் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது.
டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 47,318 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 8,132 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,75,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று 4,458 பேருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தில் இன்று 4,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 6,313 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 96.7% ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 96.7% ஆக உள்ளது. மே 7ஆம் தேதிக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 30.79 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் கோயில்களை திறக்கக்கோரி மனு
கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை மற்றும் கோயில்களை திறக்கக் கோரி மனுத் தாக்கல். ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் விசாரிக்கிறது.