Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
Tamil Nadu Coronavirus Live News : தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,023 ஆக உள்ளது. இது, கடந்த 38 நாட்களில் மிகக்குறைவு. தற்போது, மாநிலம் முழுவதும் 2,18,595 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,045 பேர் குணமடைந்தனர்.
தொடர்ந்து 12-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.
தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?
புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் (titer for neutralizing antibodies) முறையே 3 மற்றும் 2.7 மடங்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.




















