மேலும் அறிய

TN Corona LIVE Updates:: தமிழ்நாட்டில் 17000-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

TN Corona Cases LIVE Updates

LIVE

Key Events
TN Corona LIVE Updates::  தமிழ்நாட்டில் 17000-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

Background

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பேராபத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனைக்கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் திணறி வருகின்றன. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே தற்போது பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத மருத்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது எனவும், பல இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவிவருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  தெரிவித்துவருகிறது. இந்த நிலையில் தான் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற இந்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டதோடு, எவ்வாறு அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அதன்படி 18-44 வயதுடைய கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்களுக்கான முன்பதிவு  இன்று மாலை 4 மணி முதல் துவங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவு எவ்வாறு மக்கள் மேற்கொள்ளவேண்டும், எந்த இணையத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

1. 18-44 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் கோவின் ஆப் (coWiN APP) அல்லது ஆரோக்கிய செயலி இணையத்திற்கு சென்று தங்களுடைய மொபைல் எண்ணினை குறிப்பிட்டு ஓடிபி உதவியோடு இணையத்திற்குள் செல்ல வேண்டும்.

2. யாருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ? அவருடைய ஆதார் அட்டை , பான் கார்டு அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டை இருந்தால் அதனை இணையத்திற்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நாளான்று மறக்காமல் அடையாள அட்டையினை கையில் எடுத்துச்செல்ல வேண்டும்.

3. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவின் போது தங்களுடைய பின்கோடுடன் முகவரியை பதிவிடும் போது, அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் நமக்கு காண்பிக்கப்படும், மேலும் அதில் காலை மற்றும் மாலை  எந்த நேரம் தேவையோ அதனை பதிவிட்டுக்கொள்ளலாம். 

4. இது அரசு மருத்துவமனை மட்டுமில்லை தனியார் மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில், தேவையின்றி மக்கள் மருத்துவமனைக்கு அழைய நேரிடாது எனவும், கொரொனா தடுப்பூசி பற்றாக்குறையான சமயத்தில் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கப்பெறுகிறதோ? அந்த நேரத்தில் வந்து மக்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவும் இந்த முன்பதிவு நடைமுறை இன்று முதல் துவங்கியுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவிக்கையில், மே 20 ஆம் தேதிக்கு கோவாக்சில்டு வேக்சின் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்களும் மே 15 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

18:41 PM (IST)  •  28 Apr 2021

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரேநாளில் 4,764 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், 98 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,826 ஆக அதிகரித்துள்ளது.

12:28 PM (IST)  •  28 Apr 2021

புதுச்சேரியில் மேலும் 1,254 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவில் மேலும் 1,254 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 56,305 ஆக உள்ள நிலையில் 781 பேர் உயிரிழந்துள்ளனர். 8,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11:01 AM (IST)  •  28 Apr 2021

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் 960 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது.

10:12 AM (IST)  •  28 Apr 2021

ஆக்சிஜன் தட்டுப்பாடு டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் : மத்திய அரசு

ஆக்சிஜன் தட்டுப்பாடு டெல்லி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வருகின்ற 30 ஏப்ரலுக்குள் அதிகரிக்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

10:04 AM (IST)  •  28 Apr 2021

24 மணிநேரத்தில் 1,723,912 கொரோனா சாம்பிள்கள் பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,723,912 கொரோனா சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs SRH  LIVE Score: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றி; முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி?
DC vs SRH LIVE Score: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றி; முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி?
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE:  பாஜகவை ஏன் பினராயி விஜயன் தாக்கிப் பேசுவதில்லை? பிரியங்கா காந்தி பிரச்சாரம்
Breaking Tamil LIVE: பாஜகவை ஏன் பினராயி விஜயன் தாக்கிப் பேசுவதில்லை? பிரியங்கா காந்தி பிரச்சாரம்
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs SRH  LIVE Score: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றி; முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி?
DC vs SRH LIVE Score: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றி; முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி?
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE:  பாஜகவை ஏன் பினராயி விஜயன் தாக்கிப் பேசுவதில்லை? பிரியங்கா காந்தி பிரச்சாரம்
Breaking Tamil LIVE: பாஜகவை ஏன் பினராயி விஜயன் தாக்கிப் பேசுவதில்லை? பிரியங்கா காந்தி பிரச்சாரம்
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Embed widget