(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus LIVE : மாவட்டம் வாரியாக 69,970 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
மருத்துவமனைகளில் உயிரிழப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் விடப்பட்டிருந்தால் அவற்றை முறையாக பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறித்தியுள்ளது.
6.3% பயனாளிகள் மட்டுமே இரண்டுகட்ட தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளில் 28.9% பேர் மட்டுமே முதல்கட்ட தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். 6.3% பயனாளிகள் மட்டுமே இரண்டுகட்ட தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். இது, தேசிய சராசரி தடுப்பூசி எண்ணிக்கையை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
69,970 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு
69,970 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று (23.07.2029) மொத்தம் 138 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு மொத்தம் 24.500 கோவிஷில்டு தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவனை கோவிஷில்டு தடுப்பூசி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போடப்படும். கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் இல்லை எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி எடுத்துகொண்டோர் விபரம்
நாடு முழுவதும் வயது வாரியாக கோவிட் தடுப்பூசி எடுத்துகொண்டோர் விபரம்:
- 60 வயதுக்கு மேல்: 25.5%
- 45-60 வயது: 34.1%
- 18-44 வயது: 40.4%
India Daily Covid-19 Daily cases: கடந்த 24 மணி நேரத்தில், 35,342 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 483 உயிர்களை இந்தியா இழந்துள்ளது.