TN Assembly Session NEET LIVE: சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்
Tamil Nadu Assembly Special Session on NEET LIVE: நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் சிறப்பு பேரவைக்கூட்டம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இங்கே காணலாம்
LIVE
Background
Tamil Nadu Assembly Session on NEET LIVE:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 5-ந் தேதி சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீண்டும் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக்கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு கூடாது என்னும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு கூடாது என்னும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் நீட் விலக்கு ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது
சட்டப்பேரவையில் நீட் விலக்கு ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது
நீட் தேர்வு மோசடி நடைபெறுவது வழக்கமாகியுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
தேர்வர்களுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக உதவுவது என்பது நீட் தேர்வில் நடைமுறையாக மாறியுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு சமத்துவத்திற்கு எதிரானது - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் தேர்வு சமத்துவத்திற்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமத்துவத்துக்கு எதிரானது நீட் - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் என்பது தேர்வு அல்ல.. பலிபீடம் - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் என்பது தேர்வு அல்ல.. பலிபீடம். நீட் தேர்வுக்கு முன்பாக 90% இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பெற்றுவந்தனர் - முதலமைச்சர் ஸ்டாலின்