Breaking Live : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நேற்று, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு பிரச்சினைக் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தார்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று புதுதில்லியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தார். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாரிடம் கொடுக்க கூடாது - சு.வெங்கடேசன் எம்.பி
தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட 4 பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மதுரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்தார்.
திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்
இன்று காலை 11.30க்கு கோவை பெரியார் படிப்பகம், த.பெ.திக அலுவலகத்தில் செல்பேசி ஒட்டுக்கேட்பு பற்றியான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
திருணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் சைக்கிள் பேரணி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று சைக்கிளில் பேரணியாக செல்ல உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் 22 எம்.பி.க்களுடனும், மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களுடனும் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய கட்சியாக திகழ்ந்து வருகிறது
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் - கமல்ஹாசன்
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது என்றும் தெரிவித்தார்.