Afghanistan on Kashmir: காஷ்மீரில் கவனம் செலுத்துவார்களா தலிபான்கள்? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகாலமாக அரசுக்கும், தலிபான்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தலிபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றியுள்ளனர். நாட்டை கைப்பற்றிய அவர்கள் புதிய ஆட்சியையும் அமைக்க உள்ளனர். தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய காரணத்தால் ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டையே கைப்பற்றியுள்ளதால் அண்டை நாடுகளும், உலகின் முக்கியமான நாடுகளும் இந்த விவகாரத்தின் தீவிரமாக கவனித்து வருகின்றனர். மேலும், தங்களது நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
Taliban has clarified its position on Kashmir. It regards it as a bilateral, internal issue; their focus is unlikely on Kashmir: Sources
— ANI (@ANI) August 17, 2021
இந்த நிலையில், இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீரில் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், காஷ்மீர் விவகாரத்தில் தலிபான் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இது இருதரப்பு விவகாரம். உள்நாட்டு பிரச்சினையாக தலிபான் கருதுகிறார்கள். இதனால், காஷ்மீரில் அவர்களின் கவனம் சாத்தியமில்லை.
There will be increased security vigil in Kashmir but things are in control and Pakistan based groups in #Afghanistan have little capacity to use the situation: Sources
— ANI (@ANI) August 17, 2021
காஷ்மீரில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்படும். ஆனால், விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட குழுக்களுக்கு நிலைமையை உபயோகிக்கும் திறன் குறைவாகவே உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் பல ஆண்டுகளாகவே ராணுவத்தினருக்கும், தீவிரவாத குழுவினருக்கும் அடிக்கடி சண்டைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தலிபான்கள், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள சூழலில், பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிப்பதற்கு : Afghanistan Taliban Conflict: ‛ஏன் நுழைகிறோம்... ஏன் வெளியேறினோம்...’ 20 ஆண்டுகளில் அமெரிக்கா கூறிய காரணங்கள் இதோ!