Supreme Court Live Stream: உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு… இந்திய நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்!
தலைமை நீதிபதி என்.வி. ரமணா உச்ச நீதிமன்ற நீதிபதியாக தனது கடைசி வேலை நாளான இன்று, அதற்கான நீதிமன்ற நடைமுறைகள் பெஞ்ச் முன் நடைபெருகின்றன. இந்த நடவடிக்கைகள் இந்த இணைப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு இன்று நடைபெறும் வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவின் நீதிமன்ற வரலாற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
உச்சநீதிமன்ற நேரலை
உச்சநீதிமன்ற வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும், ஏனெனில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளை கொள்கையளவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த தீர்ப்புக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடப்பது இதுவே முதல் முறை. இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா உச்ச நீதிமன்ற நீதிபதியாக தனது கடைசி வேலை நாளான இன்று, அதற்கான நீதிமன்ற நடைமுறைகள் பெஞ்ச் முன் நடைபெருகின்றன. இந்த நடவடிக்கைகள் இந்த இணைப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
என்.வி. ரமணா ஓய்வு
நீதிமன்ற வழக்கப்படி, வெளியேறும் இந்திய தலைமை நீதிபதி, தனது கடைசி வேலை நாளில் அடுத்த இந்திய தலைமை நீதிபதியுடன் பெஞ்சைப் பகிர்ந்து கொள்கிறார். பார் கவுன்சில் உறுப்பினர்கள் அவரது கடைசி வேலை நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி பெஞ்ச் முன் தங்கள் பிரியாவிடையை தெரிவிக்கின்றனர். இன்று, தலைமை நீதிபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோருடன் தலைமை நீதிபதி ரமணா பெஞ்சை பகிர்ந்து கொள்கிறார்.
நேரலை அறிக்கை
உச்சநீதிமன்றத்தின் கம்ப்யூட்டர் செல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "மாண்புமிகு தலைமை நீதிபதியின் பணியின் கடைசி நாளான இன்று அவருக்கு தகுந்த மரியாதை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 26, 2022 அதாவது இன்று காலை 10:30 மணி முதல் NIC' வெப்காஸ்ட் போர்ட்டல் மூலம் இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்" ,என்று கூறப்பட்டுள்ளது.
நேரலை ஒளிபரப்ப அனுமதி
செப்டம்பர் 26, 2018 அன்று, உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் குற்றங்கள் மற்றும் திருமண தகராறுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப் படாமல் இருந்தது. கர்நாடகா, குஜராத், ஒடிசா போன்ற நாட்டின் பல உயர் நீதிமன்றங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்புகின்றன.
https://webcast.gov.in/events/MTc5Mg--
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் உச்ச நீதிமன்ற நேரலையை காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்