மோடிக்கு மணற்சிற்பம்… பிறந்தநாள் வாழ்த்தாக 1,212 டீ கப்கள் பயன்படுத்தி உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!
"டீ விற்றது தொடங்கி நாட்டின் பிரதமராக மாறிய சாதனை பயணத்தை குறிக்கும் விதமாக இந்த சிற்பத்தில் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி உள்ளேன்", என்று கூறியுள்ளார்.
72 வது வயதில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,212 மண் தேநீர் கோப்பைகளைப் பயன்படுத்தி ஐந்து அடி மணல் சிற்பத்தை உருவாக்கி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடிக்கு மணற்சிற்பம்
உலக அளவில் பிரபலமான மணல் கலையை உருவாக்கி செய்திகளில் இடம்பிடித்த சுதர்சன் பட்நாயக் இந்த முறை பிரதமர் மோடியின் ஐந்து அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்க மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி உள்ளார். பிரதமர் மோடியின் சிலையை செய்ய இந்த மணல் கலைஞர் சுதர்சன் சுமார் 5 டன் மணலைப் பயன்படுத்தி உள்ளார். அந்தச் சிற்பத்தில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி' என்ற வாழ்த்து செய்தியையும் அவர் எழுதி இருக்கிறார். இந்த மணல் கலைஞருக்கு உலக அளவில் புகழ்பெற்ற மணல் கலைப் போட்டியில் பங்கேற்றதற்காக 2014 இல் பத்மஸ்ரீ சுதர்சன் விருது வழங்கப்பட்டது.
டீ கப் ஏன்?
"டீ விற்றது தொடங்கி நாட்டின் பிரதமராக மாறிய சாதனை பயணத்தை குறிக்கும் விதமாக இந்த சிற்பத்தில் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி உள்ளேன். இங்கு, எனது கலை மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று சுதர்சன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்: பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
செய்த சாதனைகள்
இதுவரை, சுதர்சன் பட்நாயக் 60 க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் கலை சாம்பியன்ஷிப் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்றுள்ளார். இதுபோன்ற போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டிற்காக பல பரிசுகளையும் வென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு சமூக செய்தியை பரப்புவதற்கு இந்த கலைஞர் தனது படைப்பு வெளிப்பாட்டைப் பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
சுதர்சனின் மணற் சிற்பங்கள்
அவரது மணல் கலைகள் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டப்படுகின்றன. ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அழகான மணல் கலையைக் கொண்டு வர சுதர்சன் எப்போதும் ஒரு தனித்துவமான யோசனையையும் படைப்பாற்றலையும் கொண்டிருக்கிறார். பத்து நாட்கள் நடந்த விநாயகர் சதுர்த்தியின் போது அழகிய விநாயகர் மணற் சிற்பத்தையும் செய்தார். இந்த கலைஞர் தனது பொதுவான பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, விநாயகர் சிற்பத்தை உருவாக்க சில வண்ணமயமான பூக்களையும் 3,425 லட்டுகளையும் தேர்வு செய்திருந்தார். முன்னதாக, மறைந்த லதா மங்கேஷ்கர் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கும் கலைஞர் தனது கலை வடிவத்துடன் அஞ்சலி செலுத்தினார். அவர் 2017 ஆம் ஆண்டில் 48 அடி மணல் கோட்டையைக் கட்டியதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்