’மக்களே கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள்’ - மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு..
முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கினார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணல் சிற்பத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 19 லட்சத்து 87 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 32 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இன்று 1.50 கோடியை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109-இல் இருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150-ல் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. முகக்கவசம் அணியாமல் இருப்பதாலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதாலும் மக்கள் இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மணல் சிற்பம் வரைந்துள்ளார். இவர், பிரபலங்கள், நாட்டுக்காக உழைத்தவர்களை கவுரவிக்கவும், மற்றும் சமூகநலன் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தவும் மணல் சிற்பம் வரைந்து அதன்மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். தற்போது, முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Choice is yours....Your Mask ....Your Life ,My SandArt at Puri beach in Odisha . <a href="https://twitter.com/hashtag/FightAgainstCOVID19?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#FightAgainstCOVID19</a> <a href="https://t.co/h3FHM0ArBb" rel='nofollow'>pic.twitter.com/h3FHM0ArBb</a></p>— Sudarsan Pattnaik (@sudarsansand) <a href="https://twitter.com/sudarsansand/status/1383800750870974467?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
'CHOICE IS YOURS YOUR MASK YOUR LIFE' என்று மணல் சிற்பத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் முகக்கவசம் அணிந்தவாறும், அணியாத மற்றொருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போலவும் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.