மேலும் அறிய

Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்

இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லாம் எரிபொருள் பிரச்னையில் சிக்கியிருக்கும் நிலையில், இந்திய கப்பல்கள் மட்டும் ஹார்முஸை அசால்ட்டாக கடந்து வருகிறன்றன. அந்த வரிசையில் மற்றொரு LPG கப்பல் இந்தியா வருகிறது.

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக, ட்ரம்ப் ஈரான் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவை மட்டும் இவை எதுவும் பாதிக்கவில்லை. ஆம், எல்பிஜி-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை எந்த சிரமமுமின்றி கடந்து ஒரு எல்பிஜி கப்பல் இந்தியா வந்துகொண்டிருக்கிறது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

மத்திய கிழக்கில் நிலவும் உச்சகட்ட போர் பதற்றம்

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தன. அதற்கு சளைக்காமல் பதிலடி கொடுத்துவரும் ஈரானின் கை தற்போது ஓங்கியுள்ளது என்றே கூறலாம். அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் போர் விமானத்தையே அடித்து சாய்த்து, ஈரான் அமெரிக்காவிற்கே பீதியை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து, தாக்குதல்களை தீவிரப்படுத்தி, மொத்த ஈரானையுமே அழிக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டினார். மேலும், ஈரானின் மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தகர்த்து, எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டில் எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கும் சளைக்காத ஈரான், பதிலுக்கு மிரட்டியுள்ளது. ஈரான் மீது இத்தகைய தாக்குதலை நடத்தினால், மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும் என்று ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உச்சகட்டமான போர் பதற்றம் நிலவி வருகிறது.

முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி - எரிபொருள் தட்டுப்பாடு

இதனிடையே, போர் தொடங்கியபோதே, உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதை முடக்கியும் வைத்துள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்பட பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வாரம் 2 நாட்கள் கட்டாய விடுமுறை, அலுவலக நேரங்கள் மாற்றம், வீட்டிலிருந்து பணிபுரிவது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சாமர்த்தியமாக சமாளிக்கும் இந்தியா - 9-வது கப்பல் வருகை

இப்படிப்பட்ட சூழலில், இந்தியா மட்டும் இந்த பிரச்னையை சாமர்த்தியமாக கையாண்டு வருகிறது. உலகில் எந்த நாட்டையும் பெரியதாக பகைத்துக்கொள்ளாமல், நடுநிலையாக இருந்து, நமக்கு வேண்டியதை பெற்று வருகிறது. அந்த வகையில், போர் புரிந்துவரும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனுமே இந்தியா நல்ல நட்பை பேணி வருகிறது. அதோடு, இந்த போர் விஷயத்தில் எந்த பக்கமும் சாயாமல், நடுநிலையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, ஹார்முஸை முடக்கிய ஈரான், இந்திய கப்பல்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதனால், இந்திய கொடிகளுடன் இதுவரை 8 கப்பல்கள், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி-ஐ இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில், இந்திய கொடியுடன், க்ரீன் ஆஷா என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, இந்தியா நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஷிவாலிக், நந்தா தேவி, ஜக் லடாகி, பைன் கேஸ், ஜக் வசந்த், பிடபிள்யூ எல்ம், க்ரீன் சான்வி ஆகிய கப்பல்கள் வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்தன.

தற்போது வந்துகொண்டிருக்கும் க்ரீன் ஆஷா கப்பல், 20,000 டன் சமையல் எரிவாயுவை(LPG) கொண்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget