SSLV D1 Mission: 2 செயற்கைக்கோள்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை... இஸ்ரோ தலைவர்
செயற்கைக்கோள்களிடம் இருந்து தொடர்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்
விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து இன்னும் சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
மேலும், EOS -02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகும் சிக்னலைப் பெற முடியவில்லை என்றும், சிக்னலைக் கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
SSLV-D1 performed as expected at all stages. In the terminal phase of the mission, some data loss is occurring. We are analysing the data to conclude the final outcome of the mission with respect to achieving a stable orbit: ISRO chairman S. Somanath pic.twitter.com/va2Womiro5
— ANI (@ANI) August 7, 2022
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணிநேர கவுண்ட் டவுன் முடிந்த நிலையில் சரியாக 9.18 மணிக்கு 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இஓஎஸ் 02, ஆஸாதிசார் என்ற எடை குறைந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் முன்னதாக விண்ணில் ஏவப்பட்டது.
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
ஆஸாதிசாட் செயற்கைக் கோளை 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு உழைப்பில் உருவாக்கியுள்ளது.
8 கிலோ எடை கொண்ட ஆஸாதிசாட்டில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்ஃபி கேமரா உள்ளது. 142 கிலோ எடை கொண்ட EOS - 02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பிஎஸ் எல்வி, ஜிஎஸ் எல்வி போன்று முதன்முறையாக இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சிறிய ரக ராக்கெட் ஜிஎஸ்எல்வி
நாட்டின் தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள்கள் குறித்த திட்டங்களை செயல்படுத்து வரும் இஸ்ரோ நிறுவனம், இதற்காக பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை செயற்கைக்கோள்களையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.
இந்த நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்