ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ரேஷனில் தினை: பயன்பாட்டை ஊக்குவிக்க புதிய முயற்சி!
ஆரோக்கிய நன்மைகள் மற்றும் புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற பாரம்பரிய தினை உணவுகள் வீரர்களின் வாழ்க்கை முறை நோய்களைத் தணிப்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆலோசனையைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த பிறகு, தினை நுகர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ரேஷனில் தினை மாவை அறிமுகப்படுத்தியது.
இராணுவ வீரர்களுக்கு தினை
கோதுமை மாவுக்கு ஆதரவாக தினை மாவு விநியோகம் நிறுத்தப்பட்டதால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவ வீரர்களுக்கு பூர்வீக மற்றும் பாரம்பரிய தானியங்கள் வழங்கப்படுவதை இந்த முக்கிய முடிவு உறுதி செய்யும். இந்திய இராணுவத்தின் ஆதாரங்களின் படி, நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் மற்றும் புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற பாரம்பரிய தினை உணவுகள் வீரர்களின் வாழ்க்கை முறை நோய்களைத் தணிப்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தினைகள் இப்போது வீரர்கள் மற்றும் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் தினசரி உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
ரேஷனில் 25 சதவிகித கொள்முதல்
ஆதாரங்களின்படி, இந்த நிதியாண்டில் இருந்து ராணுவ வீரர்களுக்கான ரேஷனில் தானியங்களின் (அரிசி மற்றும் கோதுமை) அங்கீகரிக்கப்பட்ட உரிமையில் 25 சதவீதத்திற்கு மிகாமல் தினை மாவை கொள்முதல் செய்ய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொள்முதல் மற்றும் வழங்கல் விருப்பத்தேர்வு மற்றும் தேவையின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.
ஊட்டச்சத்தை அதிகரிக்கும்
மூன்று பிரபலமான தினை மாவு வகைகள் - பஜ்ரா, ஜோவர் மற்றும் ராகி - விருப்பத்தை கருத்தில் கொண்டு முறையாக இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். தினை புரதங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ-கெமிக்கல்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், சிப்பாய் உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நேரம் காலம் பார்க்காமல், குளிரிலும் வெயிலிலும் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ வீரர்களுக்கு இது போன்ற தினை வகைகள் மூலம் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் என்றும், இன்னும் வலிமையுடன் இந்தியா நிற்கும் என்றும் கருதப்படுகுறது.
தினை பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்தியா
கூடுதலாக, தினைகள் செயல்பாடுகள், பராகானாக்கள், கேன்டீன்கள் மற்றும் வீட்டுச் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தினையுடன் ஆரோக்கியமான, சுவையான மற்றும் சத்தான உணவுகளை தயாரிக்க, சமையல் கலைஞர்களுக்கு மையப்படுத்தப்பட்ட பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வடக்கு எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட தினை பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சிஎஸ்டி கேன்டீன்கள் மூலம் தினை உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வணிக வளாகங்களில் பிரத்யேக மூலைகள் அமைக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் ‘உங்கள் தினையை அறிவோம்’ விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.