மேலும் அறிய

World No.1 ODI team: தொடரை இழந்து, முதலிடத்தையும் இழந்த இந்திய அணி.. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் ஆதிக்கம்!

ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 113. 286 புள்ளிகள் பெற்று ஐசிசி ஆடவர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பிறகு, இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டிக்கு பிறகு ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர். 

தொடர் யாருக்கு என்ற நிலைமையில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் நேற்று களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின் வரிசை வீரர்கள் சொதப்பலால் இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. 

இதையடுத்து, ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 113. 286 புள்ளிகள் பெற்று ஐசிசி ஆடவர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதை தொடர்ந்து, 112.638 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் சரிந்தது. 

எங்களுக்கு புதிய உலக நம்பர் 1 அணி கிடைத்துள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இந்த பதிவில், “ எங்களுக்கு புதிய உலக நம்பர் 1 அணி கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.” என பதிவிட்டிருந்தது. 

ஒருநாள் தரவரிசை அட்டவணை:

தரவரிசை அணி புள்ளி
1 113
2 113
3 111
4 111
5 106
6 101
7 95
8 88
9 72
10  ஆப்கானிஸ்தான் 71

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Original Mark Sheet: தொடங்கிய 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; எங்கே, எப்படி பெறலாம்?
10th Original Mark Sheet: தொடங்கிய 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; எங்கே, எப்படி பெறலாம்?
7 ஆயிரம் கோடி முதலீடுகள்.. 15 ஆயிரம் பேருக்கு வேலை - முதல்வரின் ஜெர்மன் பயணத்தால் தமிழகத்திற்கு ஜாக்பாட்!
7 ஆயிரம் கோடி முதலீடுகள்.. 15 ஆயிரம் பேருக்கு வேலை - முதல்வரின் ஜெர்மன் பயணத்தால் தமிழகத்திற்கு ஜாக்பாட்!
பத்திரப்பதிவு ஊழலில் 10% கமிஷன்: அமைச்சர் கொள்ளை, கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி !
பத்திரப்பதிவு ஊழலில் 10% கமிஷன்: அமைச்சர் கொள்ளை, கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி !
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு! ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு! ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Racing Viral Video : ’’தம்பி AUTOGRAPH போடுப்பா’’சிறுவனிடம் கேட்ட அஜித்வைரல் வீடியோ
ஊழலில் சிக்கிய கணவன்மேயரை புறக்கணித்த PTR பற்றி எரியும் மதுரை திமுக | Mayor | Madurai | MK Stalin
SV Sekar | ”மாமா-னு பேசுறியே பா”பேரனை வைத்து விஜயைபங்கம் செய்த S.Ve.சேகர்
DMK MLA vs People : ’’ஓட்டுக்கு மட்டும் வர்றீங்க?’’ ரவுண்டு கட்டிய கரூர் மக்கள்! திணறிய திமுக MLA
Chandra Priyanka : ‘’டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள்அலட்சியம் காட்டும் போலீஸ்’’MLA பிரியங்கா பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Original Mark Sheet: தொடங்கிய 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; எங்கே, எப்படி பெறலாம்?
10th Original Mark Sheet: தொடங்கிய 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; எங்கே, எப்படி பெறலாம்?
7 ஆயிரம் கோடி முதலீடுகள்.. 15 ஆயிரம் பேருக்கு வேலை - முதல்வரின் ஜெர்மன் பயணத்தால் தமிழகத்திற்கு ஜாக்பாட்!
7 ஆயிரம் கோடி முதலீடுகள்.. 15 ஆயிரம் பேருக்கு வேலை - முதல்வரின் ஜெர்மன் பயணத்தால் தமிழகத்திற்கு ஜாக்பாட்!
பத்திரப்பதிவு ஊழலில் 10% கமிஷன்: அமைச்சர் கொள்ளை, கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி !
பத்திரப்பதிவு ஊழலில் 10% கமிஷன்: அமைச்சர் கொள்ளை, கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி !
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு! ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு! ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
MKS In  Oxford
‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ ஆக்ஸ்போர்டில் உரையாற்றவிருக்கும் முதல்வர்..!
Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு! காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - முழு விவரம்!
Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு! காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - முழு விவரம்!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! 60 கோடியில் செவிலிமேடு பாலாற்றில் புதிய மேம்பாலம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! 60 கோடியில் செவிலிமேடு பாலாற்றில் புதிய மேம்பாலம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
120 நாடுகளில் ரிலீஸ்...1200 கோடி பட்ஜெட்...அடுத்த லெவலுக்கு சென்ற தெலுங்கு சினிமா..! தமிழ் சினிமா ?
120 நாடுகளில் ரிலீஸ்...1200 கோடி பட்ஜெட்...அடுத்த லெவலுக்கு சென்ற தெலுங்கு சினிமா..! தமிழ் சினிமா ?
Embed widget