SK 21 Update: வெறித்தனம்! ஆக்ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு
SK 21: நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத படம் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால், படக்குழு அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் இரண்டாம் பாகம் உருவாகும் திரைப்படம் அயலான் என்ற புகழையும் பெற்றுள்ளது. பொங்கலுக்கு ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைத்து வெளியான அயலான் திரைப்படம் வசூலில் 50 கோடி வசூல் செய்து பெங்கல் ரிலீஸில் வெற்றிப் படமாக அமைந்தது.
Training Grounds to Battlegrounds,
— Turmeric Media (@turmericmediaTM) February 12, 2024
He Rises to the Challenge!#HeartsonFire
Title Teaser on 16th Feb @ 5PM
➡️https://t.co/wq7qf5BMKG#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI… pic.twitter.com/4qWLyc4owT
இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்த தகவலில், ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்த படத்திற்காக நடிகர் சிவக்கார்த்திகேயன் மேற்கொண்ட உடற்பயிற்சிகள், துப்பாக்கியை கையாளுதல் பயிற்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில், வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.