Miss India 2022: மிஸ் இந்தியாவானார் கர்நாடகாவின் “சினி ஷெட்டி”...! யார் இந்த பேரழகி...?
மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்ந்து வரும் சினி ஷெட்டி CFA எனப்படும் பட்டய நிதி ஆய்வாளருக்கு படித்து வருகிறார். பரதநாட்டியத்திலும் சிறந்தவர் ஆவார்.
2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஃபெமினா இதழ் சார்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு 71வது மிஸ் இந்தியா போட்டிக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 31 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது.
View this post on Instagram
இதில் 2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவான தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா வாரணாசி மிஸ் இந்தியா மகுடத்தை சூடினார். இப்போட்டியில் இரண்டாவது இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவதும், 3வது இடத்தை உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினதா சவுஹானும் பெற்றுள்ளனர்.
View this post on Instagram
மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்ந்து வரும் சினி ஷெட்டி CFA எனப்படும் பட்டய நிதி ஆய்வாளருக்கு படித்து வருகிறார். பரதநாட்டியத்திலும் சிறந்தவர் ஆவார். இந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் நடிகைகள் நேகா துபியா, மலைகா அரோரா, டினோ மொரியா, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் மற்றும் நடிகர்கள் ராகுல் கண்ணா, ரோகித் காந்தி, ஷியாமக் தவார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்