மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Karnataka CM: ஒரே காரில் ஒன்றாக பயணம்.. கார்கே வீட்டுக்கு கூட்டாக சென்ற சித்தராமையா, சிவக்குமார்..!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்கு சித்தராமையா, சிவக்குமார் ஒரே காரில் ஒன்றாக வருகை தந்தனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒரே காரில் ஒன்றாக வருகை தந்தனர். ஒரே காரின் முன் இருக்கையில் சித்தராமையாவும், பின் இருக்கையில் டி.கே.சிவக்குமாரும் அமர்ந்திருந்தனர். 

முதலமைச்சர் தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் கார்கே இல்லத்தில் இருவரும் ஆலோசனை நடத்தினர்.  பின்பு, கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பதவியேற்பு விழா:

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் சனிக்கிழமை (20,மே,2023) பெங்களூருவில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு

 மாநில முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளது யார் என்ற போட்டி நிலவிய நிலையில், சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர்.

தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடைபெறும். அன்றைய தினம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள்." என்று தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல்:

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்தது. கடந்த 10- ம் (10,மே,2023) தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற்றது. 13ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135, பாஜக 66, மதசார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 தொகுதகளில் வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், முதல்வர் பதவியை பிடிப்பதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசியிருந்தனர்.

மக்களின் நலனுக்கு முன்னுரிமை - டி.கே.சிவக்குமார் டிவீட்

துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கதில், “கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களுக்கு முதன்மையானது; முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது; அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.” என குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் வாசிக்க..

Rahul Gandhi TN Visit: 21-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி...காரணம் என்ன?

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாளை முதல் கலை நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget