Aditya Kalra twitter post : என் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாருக்கோ கடனுதவி.. ட்விட்டரில் கொந்தளித்த ஆதித்யா கல்ரா!
தனது பெயர் மற்றும் பான் கார்டு எண்களை கொண்டு தனது அனுமதியின்றி வேறு யாருக்கோ கடன் வழங்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆதித்யா கல்ரா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிஜிட்டல் மற்றும் செய்தி சார்ந்த வலைதளங்களில் 14 ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிகை அனுபவ கொண்ட ஆதித்யா கல்ரா, தற்போது புதுதில்லியில் ராய்ட்டர்ஸ் நிறுவனங்களுக்கான சிறப்பு நிருபர், நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், தனது பெயர் மற்றும் பான் கார்டு எண்களை கொண்டு தனது அனுமதியின்றி வேறு யாருக்கோ கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆதித்யா கல்ரா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "சமீபத்தில் எனது கடன் அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
Shocking revelation in my credit report. A loan disbursed by IVL Finance (Indiabulls) @dhanicares with my PAN number & name, addresses in Uttar Pradesh and Bihar. I have no clue. How can a disbursal happen on my name and PAN. In default already @RBI @IncomeTaxIndia @nsitharaman pic.twitter.com/LMMrwKyeit
— Aditya Kalra (@adityakalra) February 13, 2022
IVL Finance (Indiabulls) மற்றும் dhanicares மூலம் எனது பான் எண் மற்றும் பெயரை பயன்படுத்தி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள யாரோ ஒரு சில பயனர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்னிடம் இதுதொடர்பாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. அது எப்படி எனது பெயர் மற்றும் பான் எண்ணில் பிறருக்கு எப்படி பணம் செலுத்த முடியும்". இது இயல்பாகவே நடக்கிறதா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் வருமான வரி துறையை டாக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைபார்த்து பிரனேஷ் என்ற நபர் கமெண்ட் ஒன்றை பதிவிட்டார். அதில், நமது ஆதார் மற்றும் பான் விவரங்களைப் பயன்படுத்தி ஒருவர் கடனைப் பெற முடியும். DHANI இலிருந்து நமக்கு எந்த தொடர்பும் இல்லாமலோஅல்லது OTP யும் வராமால் இருந்து இருக்கலாம். கடன் பெறும் போது பதிவு செய்யப்பட்ட எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாததால் உங்கள் பான் கார்டு என்னை பயன்படுத்தி வேறு நபருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்று பதிவிட்டார்.
Seems I am not alone. Loans being disbursed by @dhanicares to people who submit random PAN numbers. @IncomeTaxIndia @RBI https://t.co/HQ7fGhVZgq
— Aditya Kalra (@adityakalra) February 13, 2022
இதற்கு ரீ - ட்வீட் செய்த ஆதித்யா கல்ரா,தவறான பான் எண்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு dhanicares மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்