மேலும் அறிய

Sachin's 50th birthday: கிரிக்கெட் கடவுள் சச்சினின் 50வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...!

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  பல்வேறு முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு 50-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் தங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் நிலவட்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார். 

WWW E வீரர் ட்ரிப்பில் எச் வாழ்த்து 

டிரிப்பில் எச் வெளியிட்டுள்ள வீடியோவில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு www e குழு சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சச்சின் கிரிக்கெட் மட்டும் அல்லாது தனது வாழ்வியலிலும் பல தலைமுறையினருக்கு உந்து சக்தி என்றும் அவர் புகழாராம் சூட்டினார். 

சச்சினின் சாதனைகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின் ஆவார். 2008-ல் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து அவர் இந்தச் சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 2010-ல் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்தவர் சச்சின். மொத்தம் 49 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 1 வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின்.  ஒரு வருடத்தில் அதிக ஒருநாள் சதங்கள் எடுத்த வீரர் சச்சின். 1998-ல் 9 ஒருநாள் சதங்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் ஒரு வருடத்தில் 8 ஒருநாள் சதங்களைக்கூட எடுத்ததில்லை.

சச்சின் விளையாடிய காலத்தில் டெஸ்ட் தகுதி பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். 2004 டிசம்பரில் இச்சாதனையைப் புரிந்தார். தனது 169-வது டெஸ்டை இலங்கைக்கு எதிராக விளையாடினார் சச்சின். அப்போது ஸ்டீவ் வாஹ்-கின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். சச்சின் மொத்தம் 200 டெஸ்டுகளில்  விளையாடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின். இந்தியாவின் விராட் கோலி 75 சதங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். அதேபோல டெஸ்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான். அதிகமுறை 50+ ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். 264 முறை 50+ ரன்களைக் கடந்துள்ளார்.

சர்வதேச ஆட்டங்களில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர் சச்சின். டெஸ்டில் 14 முறையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 62 முறையும் விருதுகளை வென்றுள்ளார். அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் சச்சின். மொத்தம் 51 சதங்கள் எடுத்துள்ளார்.   . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget