மேலும் அறிய

Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

உலகப்புகழ் பெற்ற மகரஜோதி தரிசனம் சற்றுமுன் நடைபெற்றது. சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்களால் எழுப்பப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரஜோதி தரிசனத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதி தரிசனம் இன்று மாலை  நடைபெற்றது. பந்தர ராஜவம்சத்தினர் தலைமையில் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் வலியகோயிக்கல் பகுதியில் இருந்து திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள்  இருந்து சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.   


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

திருவாபரண ஊர்வலம் பம்பையை நெருங்கிய நேரத்தில்  சபரிமலையில் மகர சங்கிரம பூஜை நடத்தப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் இதுவும் ஒன்று. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த பூஜை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையான கவடியாரில் இருந்து கொண்டு வரப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

இந்த திருவாபரணங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக கொண்டு செல்லப்பட்டது. திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், நடை அடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் சரியாக மாலை 6.51 மணிக்கு காட்சி தந்தது. தொடர்ந்து மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

மகரஜோதியை தரிசிப்பதற்காக 8 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது, பக்தர்கள் சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா என்று எழுப்பி பக்திகோஷம் விண்ணை பிளந்தது. மகரஜோதியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் மகரஜோதி தரிசனத்திற்கு தினசரி 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவாபரண ஊர்வலத்தில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக எட்டு இடங்களில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

ஐயப்பனுக்கு வரும் 18-ந் தேதி வரை நெய் அபிஷேகம் நடைெபுறும். வரும் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிவடைந்த பிறகும், 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்தாண்டிற்கான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
Embed widget