Watch Video : ப்பா திரும்ப வந்துட்டியா.. கண்ணீர், அணைப்பு.. நாடு திரும்பிய பிள்ளைகளை பார்த்து கதறிய பெற்றோர்
உக்ரைனில் இருந்து இன்று நாடு திரும்பிய இந்தியர்களை அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு வரவேற்ற நெகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து வருகிறது. அந்த நாட்டில் சிக்கியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று நாடு திரும்பிய இந்தியர்களை அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு வரவேற்ற நெகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த 7 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் போர் மிதமாக நடந்தபோதும் இரண்டு நாட்களாகத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றின்மீது ரஷ்யப் படைகள் மிகவும் தீவிரமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமானப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடியோவை காண:
#WATCH | Tears and hugs at Delhi airport as stranded Indian students reunite with their families.#RussianUkrainianCrisis pic.twitter.com/zSZiUaxSZM
— ANI (@ANI) March 2, 2022
இந்நிலையில், உக்ரைன் தலைநகரம் கார்கிவ் நகரில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என இந்திய மாணவர்களிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. அதனை அடுத்து, உக்ரைனில் இருந்து பக்கத்து நாடுகளுக்கு சென்றிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 விமானத்தில் ருமேனியாவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். விமானப்படை சார்பில் இயக்கப்படும் முதல் விமானத்தில் 200 இந்தியர்கள் இன்றிரவு நாடு திரும்புகின்றனர். போலந்து மற்றும் ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் மேலும் 2 விமானங்கள் நாளை காலை இந்தியா வருகிறது.
உக்ரைனில் ஏற்கனவே ஒரு இந்திய மாணவர் உயிரிழந்ததை அடுத்து, மேலும் ஒரு மாணவர் இன்று மரணமடைந்தார். உடல் நிலை பாதிப்பால் மரணம் என தகவல் பரவி வரும் நிலையில், தாக்குதலும் காரணம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Breaking LIVE: இந்திய மாணவர்களுக்கு உதவ தயார் - போலந்து அரசு அறிவிப்பு..
— ABP Nadu (@abpnadu) March 2, 2022
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அவரவர் வகுப்புகளைத் தொடர உதவுவதாக போலந்து அரசு அறிவித்துள்ளது.https://t.co/uMSFTeMsq8#Russia #Putin #Ukraine #UkraineRussiaConflict
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்