Roopa IPS vs Rohini IAS: பொதுவெளியில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள்: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!
பொதுவெளியில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ். ரோகினி சிந்தூரி இடையேயான மோதலையடுத்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுவெளியில் இரண்டு பெண் அதிகாரிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக்கொண்டனர். இதையெடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகினி சிந்தூரி ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எஸ். / ஐ.ஏ.எஸ். அதிகாரி மோதல் விவகாரம் :
அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகிணி சிந்தூரி மீது ரூபா, 19 குற்றாச்சாட்டுகளை வைத்தார். இதோடு, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்தார் எனவும் ரூப குற்றஞ்சாட்டினார். இது குறித்து ஃபேஸ்புக் போஸ்ட் சமீபத்தில் வெளியானது.
ரோகிணி தன் மீது குற்றம் சாட்டப்பதற்கு சட்ட நடவட்டிகை எடுக்கப்போவதாக கூறினார். மேலும், ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மைசூரில் பணிபுரிந்தபோது சக பெண் அதிகாரியான ஷில்பா நாக் என்பருவடன் ஏற்பட்ட மோதலால் இடமாற்றம் செய்யப்பவர் ரோகிணி. தற்போது ரூபா ஐ.பி.எஸ். உடன் ஏற்பட்ட பிரச்சனையில் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள்:
ரூபா ஐ.பி.எஸ். குற்றச்சாட்டுகள்:
ரோகிணி சிந்தூரி, மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, முன்னாள் அமைச்சரும், இப்போதைய எம்.எல்.ஏ. சா.ரா. மகேஷுக்கும் அரசு நிலம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ரோகிணி அவரை ஏன் சமாதானம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
கொரோனா காலத்தில், அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரோகிணி குற்றச்சாட்டுகள் :
“பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாகிறது. ரூபா எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார். தற்போது உள்ள முன்னாள் கேடர் பதவி உட்பட, அவர் பணியாற்றிய ஒவ்வொரு இடத்திலும் அதைச் செய்துள்ளார். ரூபா பகிர்ந்த படங்கள் சமூக ஊடக இடுகைகள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள். என்னையும், எனது பெயரையும் கெடுப்பதற்காக ரூபா இத்தகைய செயலை செய்கிறார். ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் நோட்டீஸ் :
இருவரின் மோதல் விவகாரம் குறித்து மாநில அரசு தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை தொடர்பாக தலையிட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு தலைமைச் செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.
இதற்கு ரோகிணி ,தலைமைச் செயலர் வந்திதா சர்மாவை சேரில சந்தித்து ரூபா மீது புகார் கடிதம் கொடுத்தார். ” என் மீதான ரூபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை. என் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூபா - தலைமைச் செயலர் சந்திப்பு:
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவும், தலைமைச் செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து ரோகிணி மீது ஏழு குற்றச்சாடுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.
ரூபா கூறுகையில், “ ரோகிணி சிந்தூரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் தவறு செய்திருக்கிறார். அதற்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். “ என்று கூறினார்.
அரசு நடவடிக்கை:
இவர்களுக்குள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கர்நாடக அரசு இருவரின் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ரூபா, ரோகிணி இருவருக்கும் எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரூபாவின் கணவர் இடமாற்றம்:
கர்நாடக அரசின் நில அளவைத்துறை ஆணையராக இருந்த ஐ.பி.எஸ். ரூபாவின் கணவர், முனீஸ் முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளராக முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டியவர் ரூபா.