நகை கடையில் நுழைந்த 3 பேர்.. பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டல்.. கடைசியில் காமெடி
தங்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டி லட்சக்கணக்கிலான தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

தங்க நகை கடையில் அதன் உரிமையாளரை பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டி லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்க நகைகளை 3 பேர் கொண்ட கும்பலை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.
நகை கடையில் நுழைந்த மூவர்:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தியாரி பகுதியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டி லட்சக்கணக்கிலான தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடை உரிமையாளர் விஷ்ணு சாகாராம் தஹிவாலும், ஒரு ஊழியரும் கடையில் இருந்தபோது, ஒரு நபர் உள்ளே நுழைந்து தங்கச் சங்கிலிகளைக் காட்டச் சொன்னார்.
தஹிவால் அந்த நபருக்கு நகைகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். பின்னர், மூவரும் ஒரு துப்பாக்கியை எடுத்தனர். உரிமையாளரை மிரட்டி கடையில் இருந்து சுமார் 22 தோலா (260 கிராம்) தங்க நகைகளை எடுத்துச் சென்றனர். பின்னர்தான், அந்த துப்பாக்கி போலியானது என்று தெரியவந்தது.
புனேவில் பரபரப்பு சம்பவம்:
தடுக்க முயன்ற கடை உரிமையாளரையும் கொள்ளையர்கள் தாக்கி இருக்கின்றனர். துப்பாக்கியின் பின்புறத்தால் அவரை தாக்கி உள்ளனர். இதனால், அந்த துப்பாக்கி உடைந்துவிட்டது. பின்னர், மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
உடைந்த துப்பாக்கியின் பின்புறம் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர்தான் தெரிந்தது அது பொம்மை துப்பாக்கி என்று" என்றார். இதுதொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் 3) சாம்பாஜி கடம் பேசுகையில், "நாங்கள் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து வருகிறோம். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிக்க: NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?

