Bharat Jodo Yatra : ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ரியா சென்..
Bharat Jodo Yatra : மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் தாஜ்மஹால் படத்தில் நடித்த நடிகை ரியா சென் கலந்து கொண்டார்.
Bharat Jodo Yatra : மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் நடிகை ரியா சென் (Riya Sen) கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ’பாரத் ஜோடா யாத்திரை’ அதாவது ‘ஒற்றுமைப் பயணம்’ எனும் பேரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிரார். கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஒற்றுமைப் பயணம்:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நுழைந்த ராகுல்காந்திக்கும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கும், மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
लोग जुड़ रहे हैं...डर मिट रहा है...नया सूरज उगने ही वाला है।
— Congress (@INCIndia) November 17, 2022
आज #BharatJodoYatra में अभिनेत्री रिया सेन शामिल हुईं। pic.twitter.com/1XSFtXBAQj
நடிகை ரியா சென் பங்கேற்பு:
பிரபல பாலிவுட் நடிகையான ரியா சென் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலுக்கும் தனது ஆதரவினை தெரிவித்தார். இவர் ராகுலுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் வீடியோ அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
#BharatJodoYatra में शामिल हुई अभिनेत्री रिया सेन।
— Congress (@INCIndia) November 17, 2022
अब सड़कें इंक़लाब की गवाह बन रही है। pic.twitter.com/U1PJ3ouRh4
ரியா சென் குடும்பம் சினிமா வரலாறு கொண்டது. அவரது பாட்டி சுசித்ரா சென் (Suchitra Sen), தாய் மூன் மூன் சென்(Moon Moon Sen), அவரது சகோதரி ரைமா சென் (Raima Sen) ஆகியோர் நடிகைகள். ரியா சென் 16 -வயது இருந்தபோதே இசை வீடியோ ஒன்றில் நடத்திருந்தார். (Falguni Pathak’s -இன் ’Yaad Piya Ki Aane Lagi’. என்ற பாடல்)
ரியா சென் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தமிழில் தாஜ்மஹால் படித்தில் நடித்திருக்கிறார்.
நடிகையும்,இயக்குநருமான பூஜா பட் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பு:
தெலுங்கானாவில் பிரபல திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் ( Mahesh Bhatt) -இன் மகளும், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளில் செயல்படும் பூஜா பட் (Pooja Bhatt) ராகுலின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்று தனது ஆதரவினை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Yes a ‘brief’ 10.5 km walk to be precise. 😄🙏♥️ #BharatJodaYatra https://t.co/TuScdBRHgs
— Pooja Bhatt (@PoojaB1972) November 2, 2022
காங்கிரஸின் வெகுஜன தொடர்பு முயற்சியான இந்த யாத்திரை, மகாராஷ்டிாவின் 14 நாள் பயணத்தில், 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக பயணிக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறது. மேலும் அந்த மாநிலத்தில் கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா வழியாகச் சுமார் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தானை சென்றடைகிறது.