Republic Day 2023: அகிம்சைக்கு காந்தி; புரட்சிக்கு பகத் சிங் : நாட்டுக்கு இன்னுயிர் நீர்த்த தலைவர்களின் பொன்மொழிகள்!
நம் நாட்டுக்கு இன்னுயிர் நீர்த்த தலைவர்களின் பொன் மொழிகளை குடியரசு தினத்தில் நினைவுக் கூறுவோம்.
குடியரசுத் தினம்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதியே கிடைத்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையால் ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. வெளிநாட்டவர்கள் தலையீடின்றி இந்தியாவுக்கு என்று ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு தின விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ந் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியா தனது 74வது குடியரசு தின விழாவை கொண்டாடப்பட உள்ளது.
இதனை அடுத்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும்.
இந்நிலையில், பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு இடையே நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்.
மகாத்மா காந்தி
சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைப்படுபவர் மகாத்மா காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மகாத்மா காந்தி. சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு கடுமையாக பாடுபட்டவர். மேலும் உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற முக்ககியமான இயக்கங்களை தொடங்கினார். காந்தி நடத்திய மூன்று முக்கிய விடுதலை போராட்டங்கள் தான் விடுதலைக்கு வழிவகுத்தன.
அவரை நினைவுக் கூறும் வகையில் அவரின் பொன்மொழிகள் சில...
- மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
- கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
- மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.
- நோயை காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது.
- நேற்றைய தோல்விகளை பற்றி நிங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இன்றைய தோல்விகள் குறைவாகவே இருக்கும்.
அம்பேத்கர்
சட்டமேதை என்று போற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கர். சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை பற்ற பேசியவர். இந்தியாவில் ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான சிந்தனை கொண்டவர். அதற்கான செயல்பாடுகளைவும் மேற்கொண்டார். அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெண்களின் உரிமைக்களுக்காக தன் பதிவியையும் தூக்கி ஏறிந்தார். இப்படிப்பட்ட தலைவரின் பொன்மொழியை தற்போது பார்ப்போம்.
- அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டி புதையுங்கள்.
- தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கிறது.
- வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம்.
- ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
- அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
பகத் சிங்
புரட்சியளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பகத்சிங் தான். தன்னுடைய கடைசி மூச்சின்போது தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூங்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையை பற்றி மட்டுமே நினைத்தார். இவரின் பொன்மொழிகள் சிலதை நினைவுக் கூறுவோம்.
- கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலச்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது.
- மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வரை தான் சட்டம் அதன் புனித தன்மையை பெற்றிருக்கும்.
- மிக ஆபத்தான ஒன்று குருட்டு நம்பிக்கை. இது மனிதனின் மூளையை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளிவிடும்.
- தனி நபர்களை கொல்வது எளிது ஆனால், உங்களால் கருத்துக்களை கொல்ல முடியாது.
- கேளாத காதுகளை கேட்க செய்வதற்கு உரத்த குரல்கள் தேவைப்படுகிறது.
இதுபோன்ற பல தேசிய தலைவர்களும் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். அதன்படி, ஜவஹர்லால் நேரு, சந்திரசேகர் ஆசாத், சரோஜினி நாயுடு, சர்தர் வல்லபாய் பட்டேல் உள்ளிட்டோரை குடியரசு நாளில் நினைவுக் கூறுவோம்.