Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Reliance Jio New 5G Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது, வரும் ஜூலை 3ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது.
செல்போன் கட்டணத்தை உயர்த்தி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய கட்டண நடைமுறை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு மாத பிளான்: கட்டண உயர்வுக்கு முன்பு இந்த பிளான் 209 ரூபாயாக இருந்தது. தற்போது, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, நாள் ஒன்றுக்கு 1.5 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 239 ரூபாயாக இருந்தது.
Media Release - Jio Introduces New Unlimited Plans
— Reliance Industries Limited (@RIL_Updates) June 27, 2024
Continues to Provide Best Value to Customers pic.twitter.com/MUng7WL4H0
நாள் ஒன்றுக்கு 2 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 299 ரூபாயில் இருந்து 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2.5 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 349 ரூபாயில் இருந்து 399 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 மாத பிளான்: நாள் ஒன்றுக்கு 1.5 GB Data வீதம் 56 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 579 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் கட்டணம் 479 ரூபாயாக இருந்தது.
நாள் ஒன்றுக்கு 2 GB Data வீதம் 56 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 629 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் கட்டணம் 533 ரூபாயாக இருந்தது.
ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டண நடைமுறை குறித்து பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, "5G மற்றும் Al தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதால் தொழில்துறை கண்டுபிடிப்புகளை மேம்படும். நிலையான வளர்ச்சியை நோக்கி செல்வோம்.
அந்த வகையில், புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருப்பது சரியான திசையில் செல்வதற்கான புதிய படியாகும். எங்கும் நிறைந்த, உயர்தர, மலிவு விலை இணையம் டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது. இதற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்கிறது.
ஜியோ எப்பொழுதும் நம் நாட்டையும் வாடிக்கையாளரையும் முதலிடத்தில் வைக்கும். இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும்" என்றார்.