Rajasthan:அய்யய்யோ! ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் - மக்கள் எப்படி தற்காத்து கொள்கிறார்கள்?
Rajasthan Temperature: ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில், 50 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம்:
கடந்த சில தினங்களாக, இந்தியாவின் வடக்கு பகுதிகளில், பெரும் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ராஜஸ்தானில் கடுமையான வெப்ப அலை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Phalodi (Rajasthan) recorded the Highest Maximum Temperature of 50 °C this summer on 25th May, 2024#heatwave #heatwavealert #weatherupdate #maximumtemperature #rajasthan #phalodi@moesgoi @DDNewslive @ndmaindia @airnewsalerts @WMO pic.twitter.com/gLfmpgbIN8
— India Meteorological Department (@Indiametdept) May 26, 2024
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கையின் படி, சனிக்கிழமை, ஜெய்சால்மரில் 48.0 டிகிரி செல்சியஸ், பிகானரில் 47.2 டிகிரி செல்சியஸ், சுருவில் 47.0 டிகிரி செல்சியஸ், ஜோத்பூரில் 46.9 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கணிசமாக பாதித்துள்ளது.
50 டிகிரி செல்சியஸ்:
குறிப்பாக நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பவர்கள், கடுமையான வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் முயற்சியில், ஒளியைத் தவிர்ப்பது மற்றும் முகத்தை துணியால் மூடுவது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ராதே ஷியாம் சர்மா கூறுகையில், ராஜஸ்தானில் இந்த கோடை சீசனில் முதல் முறையாக அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் பதிவானது. அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்பம் தொடரும். மே 28 மற்றும் 29 முதல் வெப்பநிலையில் 2-3 டிகிரி குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை அதிகாரி தெரிவித்தார்.
தற்காத்து கொள்ளும் மக்கள்:
மேலும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடும் வெப்ப அலையில் இருந்து தற்காத்து கொள்ள, உடலை நீரேற்றம் கொண்டதாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். அடிக்கடி நீர் அருந்துகிறோம். இளநீர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்துகிறோம். வெளியில் தேவையின்றி செல்வதை தவிர்த்து வருகிறோம். வெளியில் செல்லும்போது முகத்தில் துணி அணிந்து கொண்டுதான் செல்கிறோம் என தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பகுதியில், 50 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.