மேலும் அறிய

Vande Bharat: 'இனி படுத்துகிட்டே போகலாம்...' வந்தே பாரத்தில் விரைவில் படுக்கை வசதி - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

Vande Bharat Express: வந்தே பாரத் ரயிலில் விரைவில் படுக்கை வசதி அறிமுக செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் செமி விரைவு வந்தே பாரத் விரைவு இரயிலில் (VARANASI Semi-high-speed Vande Bharat Express ) விரைவில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி:

வந்தே பாரத் இரயில்கள், தற்போது அமர்ந்து பயணிக்கும் வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தொலைதூரம் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், படுக்கை வசதியுடன் கூடியதாக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமைச்சர், வாரணாசி - தமிழ்நாடு இடையே காசி-தமிழ் சங்கமம் சிறப்பு இரயில் சேவையை அறிமுகம் செய்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ( Banaras Hindu University-BHU) நடைபெற்று வரும் காசி-தமிழ்ச் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த புதிய இரயில் சேவை அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

காசி தமிழ்சங்கமம்:

சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட காசி-தமிழ் சங்கமம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான நூற்றாண்டு பழமையான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை இன்னும் வலுப்படுத்தும். கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி, நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசி-தமிழ் சங்கமத்தைத் தொடங்கி வைத்தார். 

30 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று (10..11.2022 -சனிக்கிழமை) அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

மேலும், வாரணாசி சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று வாராணாசி இரயில் நிலையத்தில்  நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின் போது அமைச்சருடன் இருந்த  வடக்கு இரயில்வேயின்  அதிகாரிகள், ”தொலைதூர வந்தே பாரத் இரயில் பெட்டிகளில் படுக்கை வசதி கொண்டதாக அமைப்பதன் மூலம் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்தனர். 

ஓராண்டில் செயல்படுத்தப்படும்:

அதற்கு பதிலளித்த அமைச்சர் , வந்தே பாரத் இரயிலின் புதிய அவதாரம் இன்னும் 12 முதல் 13 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், வாரணாசி சந்திப்பில் நடந்து வரும் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் ரயில் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணி மார்ச் 2023க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.!  மத்திய அரசு அதிரடி.!
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.!  மத்திய அரசு அதிரடி.!
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Embed widget