மேலும் அறிய

Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாளை(26.01.25) கொண்டாடப்பட உள்ள குடியரசு தினம் குறித்த சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

குடியரசு தினம் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது, விடுமுறை தினம், கொடி ஏற்றுவது, இனிப்புகள் வழங்கப்படுவதுதான். ஆனால், எத்தனை பேருக்கு அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் தெரியும். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

குடியரசு தினத்தின் வரலாறு...

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறினாலும், 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. பினனர் இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆண்டில் ஜனவரி 26-ம் தேதியை, மக்களாட்சி மலர்ந்த தினமாக கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து, அதை அறிவித்து செயல்படுத்தியது. அப்போது முதல் முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுவதோடு, ஜனவரி 26 ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

குடியரசு தினம் குறித்த சில முக்கிய தகவல்கள்

  • 1930-ம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினரின் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைக்கூவலை நினைவுகூர, ஜனவரி 26-ம் தேதி விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 1946 டிசம்பர் 12-ம் தேதி, ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4-ம் தேதி அரசியலமைப்பு சட்ட வரைவை சமர்ப்பித்தது.
  • 1950-ம் ஆண்டு, புது டெல்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் முதல் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3000 வீரர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களும் கலந்துகொண்டன.
  • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு ஒரு தீம் முடிவு செய்யப்பட்டு, அனைத்து மாநில அரசுகளும் அதை பின்பற்றுகின்றன.
  • 2025-ம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தீம் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின அணிவகுப்பிற்கு, ஒரு நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் அல்லது ஆட்சியாளர் முதன்மை விருந்தினராக அழைக்கப்படுகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார்.
  • குடியரசு தினத்தன்று, உயிரைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் அதீத துணிச்சலை காட்டிய குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தேசிய வீர விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
  • குடியரசு தின அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் ஒரு வருடத்திற்கு முன்பே, ஜூலை மாதத்தில் தொடங்குகிறது. அணிவகுப்பு நாளில், பங்கேற்பாளர்கள் அதிகாலை 3 மணிக்கே அணிவகுப்பு தொடங்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அப்போது, சுமார் 600 மணி நேர பயிற்சியை அவர்கள் செய்திருப்பார்கள்.
  • இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கான முழு ஆடை ஒத்திகை ஜனவரி 23-ம் தேதியன்று நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget