மேலும் அறிய

Railway New Rule: ரயில் டிக்கெட் தேதிய மாத்தணுமா.?; இனி கவலையே இல்ல; நஷ்டமில்லாத புதிய நடைமுறை வருது; முழு விவரம்

ரயில் பயணிகள், கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். பயணத் தேதியை அப்படியே மாற்றும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வருகிறது ரயில்வே துறை. விவரம் இதோ.

இந்திய ரயில்வேயில் தற்போது உள்ள நடைமுறைப்படி, கடைசி நேரத்தில் நமது பயணத் தேதியை மாற்ற வேண்டும் என்றால், ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால், நேரம் மற்றும் பண இழப்பு ஏற்படும். ஆனால், இனி அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆம், டிக்கெட்டை ரத்து செய்யாமலேயே பயணத் தேதியை மாற்ற, புதிய நடைமுறையை கொண்டு வருகிறது ரயில்வேத் துறை. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

மக்களின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில்

இந்தியாவில், மக்களின் முக்கியமான போக்குவரத்துகளில் ஒன்று ரயில். நீண்ட தூர பயணம் என்றாலே, மக்களின் முதல் தேர்வாக ரயில் தான் இருக்கும். அதேபோல், முன்கூட்டியே திட்டமிடப்படும் பயணங்களுக்கு, முன்கூட்டியே டிக்கெட்டுகளை புக் செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் ரயிலில் உள்ளது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் ரயிலை முதல் தேர்வாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறை, தினம்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் பேசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும்போது ஏற்படும் நேரம், பண இழப்பு

பொதுவாக, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவார்கள். இதனால், திட்டமிட்டப அவர்கள் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக மாற்றியது ரயில்வே துறை. அதன்படி, 120 நாட்களுக்கு முன்பே பயணிகள் தங்கள் டிக்கெட்டுகயை முன்பதிவு செய்ய முடியும்.

இந்த சூழலில், ஏராளமான பயணிகளுக்கு, ஏதாவது ஒரு காரணத்தால் கடைசி நேரத்தில் பயண தேதியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அந்த நேரத்தில், அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால், இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஒன்று கால விரயம். இண்டாவது, பண இழப்பு. ஆம், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும்போது, அதற்கென ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அதன்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை 48 முதல் 12 மணி நேரங்களுக்கு முன்பாக ரத்து செய்தால் கேன்சலேஷன் தொகையாக 25% பிடித்தம் செய்யப்படும். அதேபோல், 12  முதல் 4 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால் அதைவிட கூடுதலான தொகை பிடித்தம் செய்யப்படும். மேலும், ரிசர்வேஷன் சார்ட் தயாராகிவிட்டால், டிக்கெட்டை ரத்து செய்யவே முடியாது, மொத்த தொகையும் போய்விடும்.

புதிய மாற்றம் குறித்து அறிவித்த மத்திய ரயில்வே அமைச்சர்

இப்படிப்பட்ட சூழலில், பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டுவருகிறது ரயில்வே துறை. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கனவே உள்ள நடைமுறை நியாயமற்றதாக இருப்பதாகவும், பயணிகளுக்கு நலன் பயப்பதாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், வரும் ஜனவரி  மாதம் முதல் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டின் தேதியை, அப்படியே வேறு ஒரு புதிய தேதிக்கு கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். 

எனினும், புதிய தேதியில் ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்றும், அந்த நேரத்தில் ரயிலில் உள்ள இருக்கைகளின் நிலையை பொறுத்தே கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், புதிய தேதியின்படி டிக்கெட் விலையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அந்த அதிகப்படியான தொகையை மட்டும் பயணிகள் செலுத்த வேண்டிவரும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
MG Cars Discount: மழையை போல கொட்டிய தள்ளுபடி.. ரூ.4 லட்சம் வரை ஆஃபர், ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரை ஜமாய்
MG Cars Discount: மழையை போல கொட்டிய தள்ளுபடி.. ரூ.4 லட்சம் வரை ஆஃபர், ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரை ஜமாய்
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
Karthigai Deepam: பரமேஸ்வரிக்கு சதக்.. சதக்.. கொலைகாரியாக மாறிய சதிகாரி காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: பரமேஸ்வரிக்கு சதக்.. சதக்.. கொலைகாரியாக மாறிய சதிகாரி காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
LIVE | Kerala Lottery Result Today (17.11.2025): கன மழைக்கு நடுவில் பண மழை யாருக்கு? லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
கன மழைக்கு நடுவில் பண மழை யாருக்கு? லாட்டரி முடிவுகள்!
Embed widget