மேலும் அறிய

மக்கள் என்ன செய்யணும்ன்னு நீங்க சொல்லாதீங்க - பிரதமர் மோடியை விளாசிய ராகுல்காந்தி!

மேற்காசிய போர் காரணமாக இந்திய மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்த கருத்து கடும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு ராகுல்காந்தி கடும் கண்டம தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போர் காரணமாக இந்திய மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் - இஸ்ரேல்- அமெரிக்கா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருந்தாலும் நிலைமை எப்போதும் மோசமாக மாறலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே மக்கள் சிரமத்தை சந்திக்காத வகையில் நிலைமையை சரி செய்ய தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இப்படியான நிலையில் செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதற்காக மக்களுக்கு சில வேண்டுகோளை வைத்தார். அதாவது, தேசபக்தி என்பது எல்லையில் ஒருவரின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பது மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில், அது பொறுப்புடன் வாழ்வதும், நமது அன்றாட வாழ்வில் தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதுமாகும் என கூறினார். 

நிலைமையை சமாளிக்க மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி  வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட கோவிட் கால செயல்திறன் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும் வெளிநாட்டுத் திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வகையில் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.  இது நாட்டின் பொருளாதார நலனுக்கும் தனிப்பட்ட நலனுக்கும் நன்மை பயக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

பிரதமர் மோடியின் இந்த கருத்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மோடி அவர்கள் மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடு செல்ல வேண்டாம், பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும், மெட்ரோவில் பயணம் செய்ய வேண்டும், வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்கிறார்.

இது அறிவுரை அல்ல. இது தோல்வியின் சான்று. 12 ஆண்டுகளில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்; மக்கள் என்ன வாங்க வேண்டும், என்ன வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.ஒவ்வொரு முறையும் பொறுப்பை மக்கள் மீது தள்ளி வைத்து, தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்கிறார்கள். நாட்டை நடத்துவது என்பது இப்போது சமரசம் செய்யும் பிரதமரின் திறனை கடந்துவிட்டது” என விளாசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget