Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!
புனேவில் நடந்த சாலை விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புனேவில் நடந்த சாலை விபத்தில் 17 வயது சிறுவன் மது போதையில் சொகுசு காரில் அதிவேகமான சென்று மோதியதில் இரண்டு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக அந்த 17 வயது சிறுவன் சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது அந்த சிறுவனுக்கு நிபந்தனையாக 15 நாட்கள் எர்வாடா போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்றும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ பஸ் டிரைவர், டிரக் டிரைவர், ஓலா, உபேர், ஆட்டோ டிரைவர் யாரேனும் தவறுதலாக ஒருவரை கொன்றால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் ஓட்டும் வண்டியின் சாவியை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், ஒரு பணக்கார குடும்பத்தின் 16-17 வயது மகன் குடிபோதையில் போர்ஷை ஓட்டி இரண்டு பேரைக் கொன்றால், அவர் ஒரு கட்டுரை எழுதும்படி கேட்கப்படுகிறார்.
नरेंद्र मोदी दो हिंदुस्तान बना रहे हैं. pic.twitter.com/OPQWyK9cnf
— Congress (@INCIndia) May 21, 2024
டிரக் டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் எழுதிய கட்டுரை உங்களுக்கு ஏன் இதுவரை வரவில்லை, உபேர் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் எழுதிய கட்டுரை உங்களுக்கு ஏன் வரவில்லை. பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களால் இரண்டு இந்தியா உருவாக்கப்படுகிறது என்று பிரதமரிடம் கேட்கப்பட்டபோது, அவர் (மோடி) அனைவரையும் ஏழைகளாக்க வேண்டுமா என்று பதிலளித்தார். இங்கு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் போராடுகிறோம், அநீதிக்கு எதிராக போராடுகிறோம்” என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது..?
கடந்த மே 19ம் தேதி புனேவின் கல்யாணி நகர் பகுதியில், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் விஷால் அகர்வாலின் 17 வயது மகன், தனது ஸ்போர்ட்ஸ் காரான போர்ஷே மூலம் இரண்டு ஐடி நிறுவன ஊழியர்கள் மீது கொலை செய்தார். இந்த சம்பவம் நடந்து 15 மணிநேரத்திற்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மைனர் சில நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
17YO #Pune builder's son granted bail in just 14 hrs after ramming his #Porche into a bike carrying a couple!
— Nabila Jamal (@nabilajamal_) May 20, 2024
Ashwini Costa died on spot, Anis Dudhiya died while in treatment
Conditions of bail:
- Write 300 Page essay on 'Effect of road accident & their solution'
-Parents to… pic.twitter.com/1qZOzdFaEX
அதில், சாலை விபத்துகளின் விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், அந்த 17 வயது சிறுவன் மதுபோதையில் காரை அதிவேகமான ஓட்டிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தையான விஷால் அகர்வாலை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 304 (கொலை அல்லாத குற்றமற்ற கொலை), 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.