Rahul Gandhi Tweet: : ‛வெறுப்புகளால் நிறைந்தவர்களை மன்னித்துவிடுங்கள்’ - கோலிக்கு ராகுல் ட்வீட்!
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொருத்து இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிவாகும்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை பொய்க்கும் வகையில் சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய அணியின் உத்வேகம் இல்லாத ஆட்டத்தை பார்த்து அதிருப்தி அடைந்த ரசிகர்கள், கேப்டன் வீரட் கோலியை வசைப்பாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினரையும் தகாத முறையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வெற்றி தோல்விகளைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி சந்தித்து வரும் இந்த மோசமான சூழலின்போது இந்திய மக்கள் துணை நிற்க வேண்டும் எனவும், விமர்சனங்களை நியாயமான முறையில் வெளிப்படுத்த வேண்டுமெனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, “அன்பான விராட் கோலிக்கு, இவர்கள் அனைவரும் வெறுப்புகளால் நிறைந்துள்ளனர். ஏனெனில் இவர்களுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை, மன்னித்துவிடுங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
Dear Virat,
— Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
Protect the team.
முன்னதாக, இந்திய அணி வீரர் ஷமிக்கு எதிரான ஜாதிய விமர்சனங்கள் எழுந்தபோதும் ராகுல் தனது கருத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mohammad #Shami we are all with you.
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2021
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அடுத்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய மூன்று அணிகளுடன் மோத உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரை இறுதிக்கு செல்ல அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதிக அளவிலான ரன் வித்தியாசத்தில் வெற்றி காண வேண்டும். அதுமட்டுமின்றி, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொருத்து இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிவாகும்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்