மேலும் அறிய

"மோடியின் கெட்ட சகுணத்தால் தோற்றோம்" சர்ச்சையை கிளப்பிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடியை கெட்ட சகுணத்தால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தோற்றோம் என குறிப்பிட்ட ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்டிருந்தார்.

"இந்தியாவின் தோல்விக்கு பிரதமர் மோடியின் அபசகுணமே காரணம்"

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, "டிவியில் வந்து இந்து - முஸ்லிம் பற்றி பேசுகிறார். சில சமயம் கிரிக்கெட் போட்டிக்கு செல்கிறார். நமது வீரர்கள், உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால், கெட்ட சகுணத்தால் போட்டியை இழந்தோம். பிரதமர் என்றால் அபசகுணம் பிடித்த மோடி என்று அர்த்தம்" என்றார்.

ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், இதுகுறித்து பேசுகையில், "இந்த கருத்து வெட்கக்கேடானது. கண்டிக்கத்தக்கது. அவமானகரமானது" என்றார்.

"வாழ்நாளில் ஒரு நாள் கூட உழைக்காத 55 வயது நபர் ஒருவர், பல ஆண்டுகளாக ஒட்டுண்ணிகள் போன்று நாட்டை ஊழலினால் சுரண்டிய குடும்பத்தை சேர்ந்தவர். பத்தாண்டுகளில் நாட்டை பொருளாதார ரீதியாக அழித்த அரசாங்கம். நமது பிரதமரை இப்படிக் குறிப்பிடுவது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. மன உறுதியற்ற தன்மையை குறிக்கிறது" என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்:

பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்ட ராகுல் காந்தி ஒரு தேச விரோதி என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாடினார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவின் புகாருக்கு விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு கால அவகாசம் 
வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்த புகாரில், "ராஜஸ்தான் பிரச்சாரத்தின் போது இழிவான சொற்களை ராகுல் காந்தி பயன்படுத்தினார். பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாடுகளை சுமத்தியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின்படி, போட்டியாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதனால், நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget