Rahul Challenges CEC: “சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு கர்நாடக சிஐடி-யிடம் ஆதாரங்களை கொடுங்கள்“ - CEC-க்கு ராகுல் சவால்
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சவால் விடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, ஆதாரங்களை கர்நாடக சிஐடி-யிடம் வழங்குங்கள் என கூறியுள்ளார்.

கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6,000 வாக்குகளை நிக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் அதை கண்டுபிடித்ததால், அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, உடனடியாக ஆதாரங்களை கர்நாடக சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு என்ன.?
கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6,000 வாக்குகளை நீக்க முயற்சி நடைபெற்றதாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்த நிலையில், அவை தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், சிஸ்டமேட்டிக்காக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தான், அதற்கு பதிலளிக்கும் விதமாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சாக்கு சொல்லாதீர்கள், ஆதாரங்களை சிஐடி-யிடம் ஒப்படையுங்கள்“
தலைமை தேர்தர் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின், உள்ளூர் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளா. ஆனால், தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது“ என கூறியுள்ளார்.
மேலும், கர்நாடக சிஐடி ஆதாரங்களை கேட்டு 18 மாதங்களில் 18 கடிதங்களை எழுதியுள்ளது. ஆனால், அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள என்றும், விசாரணைக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக தேர்தல் ஆணையம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தலைமை தேர்தல் ஆணையர் அதை தடுத்துள்ளார் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
அதோடு, ஐ.பி., டிவைஸ் போர்ட்ஸ், ஓடிபி டிரையல்ஸ் போன்றவை மறைக்கப்பட்டுள்ளன என்றும், வாக்குத் திருட்டு பிடிபடவில்லை என்றால், 6018 வாக்குகள் நீக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, எங்கள் வேட்பாளர் தோல்வியடைந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, கர்நாடக சிஐடி-யிடம் ஆதாரங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
After our Aland candidate exposed the fraud, the local EC official filed an FIR, but the CID investigation has been - BLOCKED by CEC.
— Rahul Gandhi (@RahulGandhi) September 18, 2025
The Karnataka CID has written 18 letters in 18 months requesting all incriminating evidence - BLOCKED by CEC.
The Karnataka EC has sent multiple… https://t.co/l6vOv2nNga





















