Punjab Political Crisis: அமித்ஷா வீட்டில் அம்ரிந்தர் சிங்! - பாஜகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது!
காங்கிரஸ் மேலிடத்தின் கட்டளைக்கு இணங்க இரண்டு வாரத்துக்கு முன்பு அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல ஊகங்கள் இருந்து வந்தன.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் காங்கிரஸின் அம்ரிந்தர் சிங் இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே தற்போது அவர் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் தற்போது சந்தித்து வருகிறார். காங்கிரஸ் மேலிடத்தின் கட்டளைக்கு இணங்க இரண்டு வாரத்துக்கு முன்பு அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல ஊகங்கள் இருந்து வந்தன. புதிதாகக் கட்சி தொடங்குவார் எனபலர் கூறி வந்த நிலையில் தற்போது அவர் டெல்லியில் உள்ள அமித்ஷாவை அவரது இல்லத்தில் தற்போது சந்தித்து வருகிறார்.இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானதாகத் தெரிகிறது
#WATCH | Former Punjab CM and Congress leader Captain Amarinder Singh reaches the residence of Union Home Minister Amit Shah in New Delhi pic.twitter.com/787frIaou7
— ANI (@ANI) September 29, 2021
பஞ்சாப் மாநில முதல்வராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்த கேப்டன் அம்ரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸில் அவருக்கும் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் கட்சி மேலிட அறிவுரையின்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய அம்ரிந்தர் சிங் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் நான் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து காங்கிரஸ் நபர்தான். அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று எனது ஆதரவாளர்களிடம் பேசி முடிவு செய்வேன்’ எனக் கூறியிருந்தார்ர். ஆனால் பதவியை செய்துள்ள அம்ரிந்தர் சிங் அடுத்து என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது. சிலர் அவர் பாரதிய ஜனதாவில் சேர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தாலும் சிலர் அவர் புதிய கட்சித் தொடங்க உள்ளார் எனக் குறிப்பிட்டு வந்தனர். அதற்கான அறிவிப்பும் எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அம்ரிந்தர் சிங்குக்கும் பஞ்சாப் காங்கிரசுக்கும் இடையே முட்டல் மோதல் வெடிப்பது இது முதன்முறையல்ல. 2015ல் இதே போன்றதொரு சூழலில் அந்த மாநில காங்கிரஸார் அவரைக் கட்சியிலிருந்து வெளியேறச் சொல்லி வற்புறுத்தினர் இருந்தும் 2017ல் மீண்டும் அவர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்த மாநிலத்தின் பழமையான கட்சியான அகாலிதலில் இருந்து பிரிந்த அம்ரிந்தர் சிங், ஷிரோன்மனி அகலிதல் என்கிற கட்சியைத் தொடங்கினார் அது 1998ல் காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.