குட்டையான உடைகளுக்கு நோ.. வெளியாட்களால் பிரச்னை.. கிராமத்தில் கொண்டுவரப்பட்ட புது ரூல்ஸ்!
தேவை இல்லாத சண்டை சச்சரவுகள் அதிகரித்து வருவதால் பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் வெளியாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு கிராமத்தில் அற்ப விஷயங்களுக்காக சண்டை சச்சரவுகள், ஏற்படுவது அதிகரித்து வருவதால், கிராமத்தில் வசிக்கும் வெளியாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் உள்ளூர்வாசிகள்.
கிராமத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்: காரருக்கு அருகில் உள்ள ஜந்த்பூர் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை, வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளால் மக்களிடையே சச்சரவுகள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள சிலரின் நடத்தைகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ளூர் இளைஞர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
புகை பிடித்தல், உடல் தெரிவது போன்று ஆடை அணிவிப்பது, முறையான சரிபார்ப்பு இல்லாமல் வாடகைக்கு விடுதல் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
"விடுதியில் வசிக்கும் வெளியூர் ஆட்கள், இரவில் இடையூறுகளை ஏற்படுத்தி தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகவும் கிராமத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
வெளியாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: வெளியாட்கள் தங்க விரும்பினால், அவர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என ஒரு கிராமமாக ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளோம். அப்பார்ட்மெண்ட்களில் கூட விதிகள் பின்பற்றப்படுகின்றன. காவலுக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
வெளியாட்களின் தகவல்களை சரிபார்த்த பிறகு, நல்ல பண்பு உள்ளவர்கள் கிராமத்தில் தங்கலாம். அதே சமயம் குற்றப்பதிவு உள்ளவர்கள் வெளியேற வேண்டும். கிராமத்தில் சுமார் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆனால், யாரேனும் - பஞ்சாபி அல்லது பஞ்சாபி அல்லாதவர்கள் - குழப்பத்தை உருவாக்க விரும்பினால், அவர்கள் அனைவரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்" என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.