முதலமைச்சர் வீட்டருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு.. பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன..?
பஞ்சாப் முதலமைச்சர் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு, வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் விரைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மர்ம பொருள்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதலமைச்சர் பகவந்த்மான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சண்டிகரில் உள்ள பகவந்த்மான் இல்லத்தில் உள்ள தோட்டத்தில், மர்ம பொருள் இருப்பதை ஊழியர் ஒருவர் கண்டறிந்துள்ளார். அதனையடுத்து வெடிகுண்டு போன்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனையடுத்து வெடி குண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள்:
சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர், வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும். இது காவல்துறையினர் தெரிவிக்கையில், இது பீரங்கி வெடிகுண்டு என்றும் எப்படி வந்தது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்
Bomb found near Punjab CM Bhagwant Mann's house in Chandigarh; bomb squad present at the spot pic.twitter.com/qrDCnBS2IF
— ANI (@ANI) January 2, 2023
ராணுவத்துக்கு அழைப்பு:
இதையடுத்து, இராணுவத்துக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதாகவும், பின்னர் ராணுவம் பார்த்து கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
பஞ்சாப் மாநிலமானது, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள மாநிலம். அவ்வப்போது தீவிரவாதி ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்களும் நிகழும். இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டிலே வெடிகுண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.