Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி
Priyanka Gandhi: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
![Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி Priyanka Gandhi Vadra joins Rahul Gandhi in UP Moradabad as Nyay Yatra resumes Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/463b98f994057c4e6ed183e6c927300c1708766073269333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடைபெற்ற பயணத்தில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் ஜீப் மீது அமர்ந்து மக்களுடன் உரையாடினர். இந்தப் பயணத்தின் பகுதியாக ஃபேட்புர் சிக்ரி, அம்ரோஹா, சம்பால், Fatehpur Sikri via Amroha, Sambhal, புலந்த்சாகர், ஹத்ராஸ்ம் ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கும் பிரியங்கா காந்தி செல்ல இருப்பதாக கட்சியின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதியே பிரியங்கா பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பங்கேற்பதாக இருந்தது. அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் இந்த வாரம் பயணத்தில் இணைந்துள்ளார். மொரதாபாத் மக்களுடன் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
யாத்திரையின்போது பேசிய பிரியங்கா காந்தி, “பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்தீர்கள். விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதா? ஏதாவது முன்னேற்றம் அடைந்த்ள்ளதா? வாக்களிக்கும்போது இதையெல்லம் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.” என்று மக்களிடம் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் கான்ஸ்டபிள் பணிக்காக எழுத்துத் தேர்வு வினாத்தாள் முன்பே வெளியானது தொடர்பாகவும் பிரியங்கா காந்தி அதிருப்தி தெரிவித்தார். அதோடு, உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு வாக்களிக்கும்போதுதான் மாற்றம் நிகழும் என்றும் பிரியங்கா தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.
பாரத் ஜடோ நியாய யாத்திரை
ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது.
ஆக்ராவில் நாளை (25.02.2024) நடக்கும் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் முதல் வாரம் பாரத் ஜடோ நியாய யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நியாய யாத்திரைக்கு ஓய்வு கொடுத்து ராகுல் காந்தி லண்டன் செல்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)