மேலும் அறிய

பள்ளியில் நோட்புக் வாங்க மறுத்த பெற்றோர்.. முட்டாள் என திட்டிய தலைமையாசிரியர்.. கொதிக்கும் நெட்டிசன்கள்!

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி, கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் பெற்றோர்களை துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பள்ளியில் கூடுதல் நோட்டு புத்தகங்களை வாங்குமாறு பெற்றோர்களை நிர்வாகம் வற்புறுத்திய நிகழ்வு  சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி, கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் செயல்படும் சன்பீம் பள்ளியில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

அந்த பள்ளியின் மம்தா மிஸ்ரா, நீலம் வர்மா என்ற ஒரு மாணவியின் பெற்றோரிடம் மற்றவர்கள் முன்னிலையில் கோபமாக வாக்குவாதம் செய்து கத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ அப்படியே இணையத்திலும் ட்ரெண்டானது. இது கடுமையான கண்டனங்களை இணையவாசிகளிடம் பெற்றது. 

அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பதை நீலம் வர்மா விளக்கியுள்ளார். அதாவது நீலம் வர்மாவின் மகள் அலிஷா சன்பீம் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.  அவரை அழைத்து வர சம்பந்தப்பட்ட நாளில் இவர் சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் ரூ.1,200 மதிப்புள்ள கூடுதல் நோட்டுப் புத்தகங்களை பள்ளியில் வாங்குமாறு வற்புறுத்தியுள்ளது. ஆனால் தேவையான பாடப் பொருட்களைத் தான் ஏற்கெனவே வாங்கிவிட்டதாக நீலம் வர்மா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நோட்டுப் புத்தகங்கள் இல்லாததால் அலிஷா வீட்டுப்பாடம் செய்யாமல் வர தொடங்கிய நிலையில் நீலம் வர்மா பள்ளி முதல்வரை அணுகி கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். 

ஆனால் அவர் கால அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். மேலு தன்னை படிக்காத முட்டாள், பண்பாடு அற்றவள் என தலைமையாசிரியர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், பள்ளியிலிருந்து தன் குழந்தையின் பெயரை நீக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் நீலம் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இணையதளம் மூலம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி முதல்வர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பேஸ்புக்கில் அவர் பதிவிட்ட வீடியோவில் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்குமாறு அந்தப் பெற்றோர் தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், தடுப்பூசி முகாம் ஒன்றின்போது இந்தச் சம்பவம் நடந்ததால் பின்னர் பேசிக் கொள்ளலாம் என சொன்னேன் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் பற்றி பல பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் இப்படித்தான் தங்களை கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget