மேலும் அறிய

ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!

மனைவி ரூஹியின் கள்ளக்காதல் விவகாரம் கணவன் மெஹ்ராஜூக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகு திருந்தாத ரூஹி கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தகாத உறவை கண்டித்த கணவனை கொலை செய்து விட்டு இரவு முழுவதும் சடலத்தின் அருகில் மனைவி தூங்கிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் தான் இந்த கொடூரமான சம்பவடம் நடைபெற்றது. அங்குள்ள பிப்லௌதி காலா கிராமத்தைச் சேர்ந்த மெஹ்ராஜ் என்பவர் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூஹி என்ற மனைவியும் , இரு குழந்தைகளும் உள்ளனர். இப்படியான நிலையில் ரூஹிக்கு அவரது சகோதரியின் மைத்துனரான ஃபர்மானுடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் மெஹ்ராஜ் இல்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. 

இப்படியான நிலையில் மனைவி ரூஹியின் கள்ளக்காதல் விவகாரம் கணவன் மெஹ்ராஜூக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகு திருந்தாத ரூஹி மைத்துனரான ஃபர்மானுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். அதற்கு இடையூறாக இருக்கும் தன் கணவன் மெஹ்ராஜை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார்..

இதற்காக தனது திட்டத்தின்படி, மெஹ்ராஜின் உணவில்  மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கணவர், மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஃபர்மானையும் அவனது நண்பன் அத்னானையும் வீட்டிற்கு வரவழைத்த ரூஹி மெஹ்ராஜின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். கூர்மையான கத்தியால் அவரது கழுத்தை அறுத்து மூன்று பேரும் சேர்ந்து மெஹ்ராஜை கொலை செய்தனர். இந்த கொடூர செயலை அரங்கேறிய பிறகு ஃபர்மான், அத்னான் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஆனால் ரூஹி துளியும் கவலையும், பயமுமின்றி அருகே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகளுடன் சென்று இரவு முழுவதும் தூங்கியுள்ளார்.  மறுநாள் காலை மெஹ்ராஜின் தந்தை   வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பகுதியில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் தன் மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறி துடித்தார். 

இதுதொடர்பாக மருமகள் ரூஹியிடம் கேட்டபோது, திருடர்கள் வந்த நிலையில்   தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் மெஹ்ராஜ் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். எனினும் மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக காவல்துறையில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூஹியிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிப்பட்டது. இந்த கொலைக்கு காரணமான ரூஹி, ஃபர்மான், அத்னான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவர்களிடம் இருந்து மெஹ்ராஜ் கொலையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும், இரண்டு கைபேசிகளையும் மீட்டுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget